தனிகாட்டு ராஜாவுக்கு எனது கடுமை யான கண்டனகள்..........
http://thanikaatturaja.blogspot.com/2010/08/blog-post_12.html
தனி காட்டு ராஜா-வின் காரணமாக இனிமேல் இந்த வலை தளம் செயல் படாது ......
Wednesday, August 11, 2010
Monday, July 5, 2010
இரண்டு பக்கங்கள் ....
வாழையடி வாழை....
வாழைப் பூ சாம்பார்..
வாழைத் தண்டு பொரியல்..
வாழைக் காய் கூட்டு...
சர்க்கரையோடு வாழைப்பழம் ..
இவை அணைத்தும் தலை வாழை இலையில்...
சில சமயம் வாழையடி வாழை என வாழ்த்துக்கள் கூட...
இத்தனையும் என்னிடம் பெற்ற தோடு ...
இறுதியில் மணமகள் ஆக்கி...
என்னை ஏன் பிணமாக்கி ஆற்றில் எறிந்தீர்கள்?
தீட்டு
மாதம் மாதம் தீட்டாக
வந்திருக்க வேண்டிய நீ
ஆண் குழந்தையாய் வந்தாய்...
அப்படியென்றால்
பெண்ணின் தீட்டு ஆணா?
திருபணம்
அனுஷ்கா,நமிதா,அசின்
நினைப்பில் குடும்பம் நடத்திய
அவனும் ....
அஜித்,மாதவன்,கிருத்திக் ரோஷன்
நினைப்பில் குடும்பம் நடத்திய
அவளும் ...
ஒரு சுப யோக சுப ஒப்பந்த தினத்தில்
இரு மணமும் இரு குடும்ப பணமும் கூடி
திருபணம் என்ற நல்லறத்தை
துவக்கினார்கள் ....
சுபம் ..
5 நாத்திகர்கள் ...
3 ஜோதிடர்கள் ..
2 நான் கடவுள்கள் ...3 ஜோதிடர்கள் ..
1 யோகி ..
அனைவரும் இறந்தனர் தங்கள அடையாளங்களை
ரெயில் பெட்டியிலே விட்டு விட்டு ....
Labels:
கவிதை
Thursday, July 1, 2010
பொழப்பத்து போனவ....
சிக்னலில் பிச்சைக்கு
கை நீட்டும் சிறுமி .....
இன்றைய அலுவல் பற்றிய சிந்தனையில்
அவளை அலட்சியம் செய்தேன் ..
என் பெயர் பிழைப்பியல்வாதி..
அவளை பார்த்து பரிதாபத்தில்
பாத்திரத்தில் ஐந்து ரூபாய் போட்டேன்
என் பெயர் எமொசனல் இடியட்..
அவளை பார்த்து முகம் சுளித்து
இது ஒரு தொந்தரவப்பா என்றேன்
என் பெயர் கல்நெஞ்சகாரி..
அவளை பார்த்தும் பார்க்காதது
போல திரும்பி கொண்டேன் ..
என் பெயர் என்ன என்று சொல்ல தெரியவில்லை..
அவளை பற்றிய விவரங்களை
எல்லாம் கேட்டு சேகரிக்க ஆரம்பித்தேன்
என் பெயர் சமூக சேவகி ...
அவள் நிலையை கண்டவுடன் சில எண்ண மோதல்கள்
இன்று ஒரு பதிவு ரெடி ...
என் பெயர் வலைப் பதிவர்..
அவளை கண்டவுடன்
அந்த இடத்தை விட்டு விரட்டி விட்டேன் ...
என் பெயர் கடமை தவறாத காவல் அதிகாரி..
அவள் நிலையில்
என்னை வைத்து உணர்ந்து பார்த்தேன் ..
என் பெயர் மனித நேயம் மிகுந்தவள் ...
அவளை பார்த்தவுடன்
அவள் முன் சென்ம பாவம் பற்றி சிந்திக்கலானேன்..
என் பெயர் மதவாதி..
இவர்களுக்கு பிச்சை இடுவது
சோம்பேறிகளைதான் உருவாக்கும் என்றேன் அருகில் நின்றவரிடம்...
என் பெயர் தர்க்கவாதி ...
சமுதாய மக்கள் தொகை பெருக்கத்தையும் ,அரசியல் வாதிகளையும்
விமர்சனம் செய்ய ஆரம்பித்தேன்
என் பெயர் சமூகவாதி...
அவளை கண்டவுடன்
எதாவது ஓன்று செய்ய நினைத்து
கடைசிவரை ஒன்றும் செய்யாமல் நகர்ந்தேன் ...
என் பெயர் கைலாகாதவள்..
அவளை என் வீ ட்டிற்கு
அழைத்துச் சென்றேன் ....
என்னை வீட்டில் உள்ளவர்கள் அழைத்தார்கள்
"பொழப்பத்து போனவ" என்ற பெயர் சொல்லி...
-யுக கோபிகா
Thursday, June 17, 2010
நன்றி சொல்ல உனக்கு...
தோழி : ஏண்டி கோபி ,உன்னையும் உலகம் நம்புதா ?
யுக கோபிகா :அது அவுங்க தலைவிதி .....
Labels:
கதை
Friday, June 11, 2010
தாலி கட்டும் தமிழ் கலாச்சாரம் மறைய வேண்டும்.....
பாரதி கண்டிராத புதுமை பெண் என சுய விளம்பரம் கொடுத்து விட்டு 'சுண்டகாய் வத்தல் குழம்பு செய்வது எப்படி?'(எங்க அம்மாவுக்கு தான் தெரியும்) என்று பதிவு இடுவது எனக்கும் நல்லதல்ல , சுண்டகாய்க்கும் நல்லதல்ல,சமூகத்துக்கும் நல்லதல்ல...
எனவே .....
தாலி என்பது பெண்ணுக்கு வேலி,நாட்டுக் கோழி என்று சமூகத்தில் ஒரு காலத்தில் சொல்ல பட்டு வந்தது என்னவோ உண்மை தான்.
ஆனால் பெண்ணிற்கு அமெரிக்காவில் லச்சதிற்கு மேல் சம்பளம் கிடைக்கும் எனில் வேலி தாண்டி என்ன கடல் தாண்டி அனுப்ப கூட தயாராக இருக்கிறது நம் குடும்பம் என்ற சிறு சமூகம்[அம்மா,அப்பா,தம்பி,பாட்டி மன்னிக்கவும் ].
இந்த ஒரு விஷயம் ஒன்றே போதும் என நினைக்கிறன் சமூகத்தின் மனநிலை என்ன என்று படம் பிடித்து காட்ட .
ஒரு பத்து வருடங்களுக்கு முன் ஜீன்ஸ் போட்டு கொண்டு ஒரு பெண் நடந்தால் அவ்வளவுதான் . ...ஏகப்பட்ட பின்நூட்டம் (அதுதாங்க கமண்ட்ஸ்) வரும் .இப்போது அது படி படியாக குறைந்து வருகிறது.
[ஒரு படி மேலே போயே சொல்கிறேன்..உடையை பொறுத்த வரையில் ஜீன்ஸ் எனக்கு பிடித்த ஓன்று கிடையாது.ஜீன்ஸ் நம் உடம்பை ரொம்பவும் பிடித்து கொண்டு விடுவதால் ...அதை எனக்கு பிடிப்பதில்லை.]
தாலி கட்டும் கலாச்சாரம் மறைந்தால்,ஜீன்ஸ் போட்டு கொண்டு நடந்தால் பெண் சுகந்திரம் கிடைத்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன்.[ஏன் என்றால் நான் தான் பாரதி கண்டிராத புதுமை பெண் ஆயிற்றே ] .
ஆனால் இது ஓவ்வொன்றும் பெண் மன அடிமை தனத்தில் இருந்து,தயக்கத்தில் இருந்து விடுபடும் ஒரு வழி முறையாகவே கருதுகிறேன்.
தாலி -க்கு பதில் ஆண், பெண் பரஸ்பரம் செய்ன்[பெரியார் சொல்லி விட்டார் என்று நெனைக்கிறேன்.எனக்கு பொது அறிவு கொஞ்சம் அதிகமாகவே குறைவு ] மாற்றிக் கொள்ளலாமே ?
[இதில் இன்னொரு சவுகரியம் என்னவெண்றால் ,அவசரத்துக்கு அடகு வைக்க இரண்டு செய்ன் உள்ளதே ....தாலி என்றால் ஓன்று தானே இருக்கும்]
கலாச்சாரம் என்பதெல்லாம் ஒருவித அடிமை படுத்தும் அமைப்பே என்று கருதுகிறேன்.
அந்தந்த கால கட்டதிற்கு எது சவுகரியமோ அதை செய்வது தான் சிறந்தது ...அது தான் உண்மையான் சுகந்திரம் என நான் கருதுகிறேன்.
எப்படியும் இந்த தாலி கட்டும் தமிழ் கலாச்சாரம் இன்னும் ஐம்பது வருடத்தில் இருந்து படி படியாக மறைய தொடங்கி ...இன்னும் 200 வருடத்தில் முழுவதும் மறைந்து விடும் என நான் நம்புகிறேன்.நீங்கள் நம்பறீங்களா ?
-யுக கோபிகா
Labels:
புதுமை
Thursday, June 10, 2010
பாரதி,பெரியார் கண்டிராத புதுமை பெண்..
நான் சுகந்திரம் பெற்று விட்டேன்..
இன்று எல்லா வாய்ப்புகளும்
என் கைகளில் ..
வீட்டு கதவிடுக்கில் எட்டி பார்த்து
கொண்டிருந்த காலம் போய்
வலை உலகில் எட்டி பார்க்கிறேன்..
எப்போதும் சேலை கட்டும் காலம் போய்
திருமண வைபோகங்களில் மட்டும்
சேலை கட்டி பழகுகிறேன்..
வானத்தை பார்த்து சோறு ஊட்ட
மட்டும் கற்று வைத்திருந்த காலம் போய்.
வான் வெளிக்கும் போய் வந்து விட்டேன்..
இன்னும் மெல்லிய சந்தேகம் வருகிறது..
நான் ஜீன்ஸ்,டீ-ஷர்ட் -டில் நடந்து போகும் போது
உற்று உற்று பார்க்கும் சில விழிகளைப் பார்க்கும் போதும்..
மாதம் முதல் தேதி ஆனால் என் சம்பளத்தில்
கணக்கு கேக்கும் அம்மாவை நினைக்கும் போதும்..
சில சமயங்களில் "லேடீஸ் பஸ்ட்"
என்ற வாசகம் காதில் விழும் போதும்..
இன்று எனக்கு கிடைத்திருக்கும் சுகந்திரம்
பாசாங்கா?காலத்தின் கட்டயமா ?
-யுக கோபிகா
நான் சுகந்திரம் பெற்று விட்டேன்..
இன்று எல்லா வாய்ப்புகளும்
என் கைகளில் ..
வீட்டு கதவிடுக்கில் எட்டி பார்த்து
கொண்டிருந்த காலம் போய்
வலை உலகில் எட்டி பார்க்கிறேன்..
எப்போதும் சேலை கட்டும் காலம் போய்
திருமண வைபோகங்களில் மட்டும்
சேலை கட்டி பழகுகிறேன்..
வானத்தை பார்த்து சோறு ஊட்ட
மட்டும் கற்று வைத்திருந்த காலம் போய்.
வான் வெளிக்கும் போய் வந்து விட்டேன்..
இன்னும் மெல்லிய சந்தேகம் வருகிறது..
நான் ஜீன்ஸ்,டீ-ஷர்ட் -டில் நடந்து போகும் போது
உற்று உற்று பார்க்கும் சில விழிகளைப் பார்க்கும் போதும்..
மாதம் முதல் தேதி ஆனால் என் சம்பளத்தில்
கணக்கு கேக்கும் அம்மாவை நினைக்கும் போதும்..
சில சமயங்களில் "லேடீஸ் பஸ்ட்"
என்ற வாசகம் காதில் விழும் போதும்..
இன்று எனக்கு கிடைத்திருக்கும் சுகந்திரம்
பாசாங்கா?காலத்தின் கட்டயமா ?
-யுக கோபிகா
Labels:
கவிதை
என் தோட்டத்தில் பூக்கும் முதல் பூ ..
தலைப்பு கவிதை மாதிரி இருக்குதேனு பார்க்குரீங்களா ....சும்மா முதல் post ... அது தான் ..
என்னை பத்தி கொஞ்சம் சொல்லணும் ...அதிகமா சொல்ல பயமா இருக்கு ...
என்னதான் பாரதி ,பெரியார் கண்டிராத,காண விரும்பிடும் புதுமை பெண் என்று சொன்னாலும் இந்த சமுகத்த நினைச்சா கொஞ்சம் பயம் வரத்தான் செய்யுது..
ஒரு மாசமா பதிவுலகத்த வேடிக்கை மட்டும் தான் பார்த்துட்டு இருந்தேன் ..
சும்மா ,நாமளும் கதை(!),கவிதை(?) எழுதலாமேன்னு கெளம்பி வந்துருக்கேன் .
என்ன தைகிரியம்னு கேக்கரீங்களா .அட ஒன்னு ,ரெண்டு கவிதை குமுதம் சிநேகிதி -யில் கூட வந்தீருக்குங்க .
-யுக கோபிகா
தலைப்பு கவிதை மாதிரி இருக்குதேனு பார்க்குரீங்களா ....சும்மா முதல் post ... அது தான் ..
என்னை பத்தி கொஞ்சம் சொல்லணும் ...அதிகமா சொல்ல பயமா இருக்கு ...
என்னதான் பாரதி ,பெரியார் கண்டிராத,காண விரும்பிடும் புதுமை பெண் என்று சொன்னாலும் இந்த சமுகத்த நினைச்சா கொஞ்சம் பயம் வரத்தான் செய்யுது..
ஒரு மாசமா பதிவுலகத்த வேடிக்கை மட்டும் தான் பார்த்துட்டு இருந்தேன் ..
சும்மா ,நாமளும் கதை(!),கவிதை(?) எழுதலாமேன்னு கெளம்பி வந்துருக்கேன் .
என்ன தைகிரியம்னு கேக்கரீங்களா .அட ஒன்னு ,ரெண்டு கவிதை குமுதம் சிநேகிதி -யில் கூட வந்தீருக்குங்க .
-யுக கோபிகா
Subscribe to:
Posts (Atom)