பாரதி,பெரியார் கண்டிராத புதுமை பெண்..
நான் சுகந்திரம் பெற்று விட்டேன்..
இன்று எல்லா வாய்ப்புகளும்
என் கைகளில் ..
வீட்டு கதவிடுக்கில் எட்டி பார்த்து
கொண்டிருந்த காலம் போய்
வலை உலகில் எட்டி பார்க்கிறேன்..
எப்போதும் சேலை கட்டும் காலம் போய்
திருமண வைபோகங்களில் மட்டும்
சேலை கட்டி பழகுகிறேன்..
வானத்தை பார்த்து சோறு ஊட்ட
மட்டும் கற்று வைத்திருந்த காலம் போய்.
வான் வெளிக்கும் போய் வந்து விட்டேன்..
இன்னும் மெல்லிய சந்தேகம் வருகிறது..
நான் ஜீன்ஸ்,டீ-ஷர்ட் -டில் நடந்து போகும் போது
உற்று உற்று பார்க்கும் சில விழிகளைப் பார்க்கும் போதும்..
மாதம் முதல் தேதி ஆனால் என் சம்பளத்தில்
கணக்கு கேக்கும் அம்மாவை நினைக்கும் போதும்..
சில சமயங்களில் "லேடீஸ் பஸ்ட்"
என்ற வாசகம் காதில் விழும் போதும்..
இன்று எனக்கு கிடைத்திருக்கும் சுகந்திரம்
பாசாங்கா?காலத்தின் கட்டயமா ?
-யுக கோபிகா
10 comments:
வீட்டு கதவிடுக்கில் எட்டி பார்த்து
கொண்டிருந்த காலம் போய்
வலை உலகில் எட்டி பார்க்கிறேன்.///
நன்றாக எழுதியுள்ளீர்கள்!!
உங்களுடையது தான் என் Post -இல் முதல் பின்னூட்டம் ..
மனமார்ந்த நன்றி ..
மிகவும் அருமை
மேலும் எழுதுங்கள்
வாழ்த்துக்கள்
நல்லாருக்கு... வாழ்த்துக்கள்....
கையில் திணிக்கப்பட்ட சுதந்திரம் இது. கடிவாளம் மட்டும் சில கயவர்களின் கையில் இருக்கிறது... உடைத்தெரிந்து வாருங்கள்... நீங்களும் ஒரு ஆண் என்றெண்ணி... வாழ்த்துக்கள்...
சுதந்திரம் என்பது பொறுப்பு.
சுதந்திரம் அவரவர் உணர்வது... சுதந்திரமடைய வாழ்த்துகள்.. பதிவுலக்கும் :)
//மிகவும் அருமை
மேலும் எழுதுங்கள்
வாழ்த்துக்கள்//
நன்றி VELU.G
நன்றி அண்ணாமலையான்..
//கையில் திணிக்கப்பட்ட சுதந்திரம் இது. கடிவாளம் மட்டும் சில கயவர்களின் கையில் இருக்கிறது... உடைத்தெரிந்து வாருங்கள்... நீங்களும் ஒரு ஆண் என்றெண்ணி... வாழ்த்துக்கள்...//
நன்றி க.பாலாசி
//சுதந்திரம் என்பது பொறுப்பு.
சுதந்திரம் அவரவர் உணர்வது... சுதந்திரமடைய வாழ்த்துகள்.. பதிவுலக்கும் :)//
நன்றி D.R.Ashok ...
-பொறுப்புடன் யுக கோபிகா
Post a Comment