Thursday, July 1, 2010

பொழப்பத்து போனவ....




















சிக்னலில் பிச்சைக்கு  
கை நீட்டும் சிறுமி .....

இன்றைய அலுவல் பற்றிய சிந்தனையில்
அவளை அலட்சியம் செய்தேன் ..
என் பெயர்  பிழைப்பியல்வாதி..

அவளை பார்த்து பரிதாபத்தில்
பாத்திரத்தில் ஐந்து ரூபாய் போட்டேன்
என் பெயர்  எமொசனல் இடியட்..  

அவளை பார்த்து முகம் சுளித்து
இது ஒரு தொந்தரவப்பா என்றேன்
என் பெயர் கல்நெஞ்சகாரி..

அவளை பார்த்தும் பார்க்காதது
போல திரும்பி கொண்டேன் ..
என் பெயர் என்ன என்று  சொல்ல தெரியவில்லை..

அவளை பற்றிய விவரங்களை
எல்லாம் கேட்டு  சேகரிக்க  ஆரம்பித்தேன்
என் பெயர் சமூக சேவகி ...

அவள் நிலையை கண்டவுடன் சில எண்ண மோதல்கள்
இன்று ஒரு பதிவு  ரெடி ...
என் பெயர் வலைப் பதிவர்..

அவளை கண்டவுடன்
அந்த இடத்தை விட்டு விரட்டி விட்டேன் ...
என் பெயர் கடமை தவறாத காவல் அதிகாரி..   

அவள் நிலையில் 
என்னை  வைத்து  உணர்ந்து பார்த்தேன் ..
என் பெயர் மனித நேயம் மிகுந்தவள் ...

அவளை பார்த்தவுடன்
அவள் முன் சென்ம  பாவம் பற்றி சிந்திக்கலானேன்..
என் பெயர் மதவாதி..

இவர்களுக்கு பிச்சை இடுவது
சோம்பேறிகளைதான் உருவாக்கும்  என்றேன்  அருகில் நின்றவரிடம்...
என் பெயர் தர்க்கவாதி ... 
 
சமுதாய மக்கள் தொகை பெருக்கத்தையும் ,அரசியல் வாதிகளையும்
விமர்சனம் செய்ய ஆரம்பித்தேன்
என் பெயர் சமூகவாதி...  

அவளை கண்டவுடன்
எதாவது ஓன்று செய்ய நினைத்து
கடைசிவரை ஒன்றும் செய்யாமல் நகர்ந்தேன் ...
என் பெயர் கைலாகாதவள்..

அவளை என் வீ ட்டிற்கு
அழைத்துச்  சென்றேன் ....
என்னை வீட்டில் உள்ளவர்கள் அழைத்தார்கள்
"பொழப்பத்து போனவ" என்ற பெயர் சொல்லி...

-யுக கோபிகா

13 comments:

அகல்விளக்கு said...

//அவள் நிலையை கண்டவுடன் சில எண்ண மோதல்கள்
இன்று ஒரு பதிவு ரெடி ...
என் பெயர் வலைப் பதிவர்..
//

அப்படிச்சொல்லுங்க....

யுக கோபிகா said...

நன்றி அகல்விளக்கு ...

எல் கே said...

//அவளை என் வீ ட்டிற்கு
அழைத்துச் சென்றேன் ....
என்னை வீட்டில் உள்ளவர்கள் அழைத்தார்கள்
"பொழப்பத்து போனவ" என்ற பெயர் சொல்லி/
arumai

soundr said...

//என்னை வீட்டில் உள்ளவர்கள் அழைத்தார்கள்
"பொழப்பத்து போனவ" என்ற பெயர் சொல்லி..//

பயித்தியக்காரி என பட்டம் சூட்டாது தடுத்தது, அவர்களது பாசம்

தனி காட்டு ராஜா said...

பொழப்பத்து போன ஒரு கவிதை ....

யுக கோபிகா said...

//arumai//

நன்றி LK.....


//பயித்தியக்காரி என பட்டம் சூட்டாது தடுத்தது, அவர்களது பாசம் //

சரிதான் ...உலகம் அப்படி .....
நன்றி Chidambaram Soundrapandian ....

யுக கோபிகா said...

//பொழப்பத்து போன ஒரு கவிதை .... //

பொழப்பத்து போன ஒரு பின்னூட்டம்.....
கருத்துக்கு நன்றி தனி காட்டு ராஜா

விஜய் said...

எழுத எழுத இன்னும் மிளிரும் உங்கள் கவிதைகள்

வாழ்த்துக்கள் சகோ

விஜய்

"உழவன்" "Uzhavan" said...

ஒருவரின் எல்லா நிலைகளையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். பிடித்த கவிதை

யுக கோபிகா said...

//வாழ்த்துக்கள் சகோ//
நன்றி விஜய்..

//ஒருவரின் எல்லா நிலைகளையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். பிடித்த கவிதை//
நன்றி உழவன்...

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லா எழுதியிருக்கீங்க...

ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு அடையாளத்தோட மனுசன் வாழவேண்டிய சூழ்நிலைக்கைதியாகிவிட்டான்....

சுபத்ரா said...

அது சரி.. நான் கேட்டனா இந்தக் கவிதைய? இருந்தாலும் நன்றி நன்றி நன்றி..

ரொம்ப நாள் கழிச்சு இந்தக் கவிதையை மறுபடியும் படிக்கிறேன்..

//தனி காட்டு ராஜா said...

பொழப்பத்து போன ஒரு கவிதை ....//

என் தோழர் தனி காட்டு ராஜாவை நான் வழிமொழிகிறேன்.

அன்பரசன் said...

அருமைங்க.

Post a Comment