Monday, July 5, 2010

இரண்டு பக்கங்கள் ....


















வாழையடி வாழை....

வாழைப் பூ சாம்பார்..
வாழைத் தண்டு பொரியல்..
வாழைக் காய் கூட்டு...
சர்க்கரையோடு  வாழைப்பழம் ..
இவை அணைத்தும் தலை வாழை இலையில்...
சில சமயம் வாழையடி வாழை என வாழ்த்துக்கள் கூட...
இத்தனையும் என்னிடம்  பெற்ற தோடு ...
இறுதியில் மணமகள் ஆக்கி...
என்னை ஏன் பிணமாக்கி ஆற்றில் எறிந்தீர்கள்?















தீட்டு

மாதம் மாதம் தீட்டாக
வந்திருக்க வேண்டிய நீ
ஆண் குழந்தையாய் வந்தாய்...
அப்படியென்றால்
பெண்ணின் தீட்டு ஆணா?

















திருபணம்

அனுஷ்கா,நமிதா,அசின்
நினைப்பில்  குடும்பம் நடத்திய
அவனும் ....
அஜித்,மாதவன்,கிருத்திக் ரோஷன்
நினைப்பில்  குடும்பம் நடத்திய
அவளும் ...
ஒரு சுப யோக சுப ஒப்பந்த தினத்தில்
இரு மணமும் இரு குடும்ப பணமும்  கூடி
திருபணம் என்ற நல்லறத்தை
துவக்கினார்கள் ....
சுபம் .. 














அடையாளம்

ஒரு ரெயில் விபத்தில்
ஒரே பெட்டியில் பயணம் செய்த
10 ஆத்திகர்கள் ...
5  நாத்திகர்கள் ...
3 ஜோதிடர்கள் ..
2  நான் கடவுள்கள் ...
1  யோகி ..
அனைவரும் இறந்தனர் தங்கள அடையாளங்களை
ரெயில் பெட்டியிலே விட்டு விட்டு ....

Thursday, July 1, 2010

பேரிரைச்சலும் பேரமைதியும்

டமால்.........
!
!


















!
!
































!
!
















!
!

பொழப்பத்து போனவ....




















சிக்னலில் பிச்சைக்கு  
கை நீட்டும் சிறுமி .....

இன்றைய அலுவல் பற்றிய சிந்தனையில்
அவளை அலட்சியம் செய்தேன் ..
என் பெயர்  பிழைப்பியல்வாதி..

அவளை பார்த்து பரிதாபத்தில்
பாத்திரத்தில் ஐந்து ரூபாய் போட்டேன்
என் பெயர்  எமொசனல் இடியட்..  

அவளை பார்த்து முகம் சுளித்து
இது ஒரு தொந்தரவப்பா என்றேன்
என் பெயர் கல்நெஞ்சகாரி..

அவளை பார்த்தும் பார்க்காதது
போல திரும்பி கொண்டேன் ..
என் பெயர் என்ன என்று  சொல்ல தெரியவில்லை..

அவளை பற்றிய விவரங்களை
எல்லாம் கேட்டு  சேகரிக்க  ஆரம்பித்தேன்
என் பெயர் சமூக சேவகி ...

அவள் நிலையை கண்டவுடன் சில எண்ண மோதல்கள்
இன்று ஒரு பதிவு  ரெடி ...
என் பெயர் வலைப் பதிவர்..

அவளை கண்டவுடன்
அந்த இடத்தை விட்டு விரட்டி விட்டேன் ...
என் பெயர் கடமை தவறாத காவல் அதிகாரி..   

அவள் நிலையில் 
என்னை  வைத்து  உணர்ந்து பார்த்தேன் ..
என் பெயர் மனித நேயம் மிகுந்தவள் ...

அவளை பார்த்தவுடன்
அவள் முன் சென்ம  பாவம் பற்றி சிந்திக்கலானேன்..
என் பெயர் மதவாதி..

இவர்களுக்கு பிச்சை இடுவது
சோம்பேறிகளைதான் உருவாக்கும்  என்றேன்  அருகில் நின்றவரிடம்...
என் பெயர் தர்க்கவாதி ... 
 
சமுதாய மக்கள் தொகை பெருக்கத்தையும் ,அரசியல் வாதிகளையும்
விமர்சனம் செய்ய ஆரம்பித்தேன்
என் பெயர் சமூகவாதி...  

அவளை கண்டவுடன்
எதாவது ஓன்று செய்ய நினைத்து
கடைசிவரை ஒன்றும் செய்யாமல் நகர்ந்தேன் ...
என் பெயர் கைலாகாதவள்..

அவளை என் வீ ட்டிற்கு
அழைத்துச்  சென்றேன் ....
என்னை வீட்டில் உள்ளவர்கள் அழைத்தார்கள்
"பொழப்பத்து போனவ" என்ற பெயர் சொல்லி...

-யுக கோபிகா