Monday, July 5, 2010

இரண்டு பக்கங்கள் ....


வாழையடி வாழை....

வாழைப் பூ சாம்பார்..
வாழைத் தண்டு பொரியல்..
வாழைக் காய் கூட்டு...
சர்க்கரையோடு  வாழைப்பழம் ..
இவை அணைத்தும் தலை வாழை இலையில்...
சில சமயம் வாழையடி வாழை என வாழ்த்துக்கள் கூட...
இத்தனையும் என்னிடம்  பெற்ற தோடு ...
இறுதியில் மணமகள் ஆக்கி...
என்னை ஏன் பிணமாக்கி ஆற்றில் எறிந்தீர்கள்?தீட்டு

மாதம் மாதம் தீட்டாக
வந்திருக்க வேண்டிய நீ
ஆண் குழந்தையாய் வந்தாய்...
அப்படியென்றால்
பெண்ணின் தீட்டு ஆணா?

திருபணம்

அனுஷ்கா,நமிதா,அசின்
நினைப்பில்  குடும்பம் நடத்திய
அவனும் ....
அஜித்,மாதவன்,கிருத்திக் ரோஷன்
நினைப்பில்  குடும்பம் நடத்திய
அவளும் ...
ஒரு சுப யோக சுப ஒப்பந்த தினத்தில்
இரு மணமும் இரு குடும்ப பணமும்  கூடி
திருபணம் என்ற நல்லறத்தை
துவக்கினார்கள் ....
சுபம் .. 


அடையாளம்

ஒரு ரெயில் விபத்தில்
ஒரே பெட்டியில் பயணம் செய்த
10 ஆத்திகர்கள் ...
5  நாத்திகர்கள் ...
3 ஜோதிடர்கள் ..
2  நான் கடவுள்கள் ...
1  யோகி ..
அனைவரும் இறந்தனர் தங்கள அடையாளங்களை
ரெயில் பெட்டியிலே விட்டு விட்டு ....

19 comments:

LK said...

all are good :)

க.பாலாசி said...

ஒவ்வொன்றும் நச்சென்று இருக்குங்க...

//அனைவரும் இறந்தனர் தங்கள அடையாளங்களை
ரெயில் பெட்டியிலே விட்டு விட்டு .... //

செத்தப்பிறகாவது ஒழிஞ்சதே... அருமைங்க..

அகல்விளக்கு said...

well said.....

யுக கோபிகா said...

//all are good :) //

நன்றி LK ..

//செத்தப்பிறகாவது ஒழிஞ்சதே... அருமைங்க.. //
கருத்துக்கு நன்றி க.பாலாசி ..


//well said..... //
நன்றி அகல்விளக்கு ...

விஜய் said...

ஒரே அதிரடி கவிதைகளாய் இருக்கு சகோ

ரொம்ப பிடித்தது

வாழ்த்துக்கள்

விஜய்

தனி காட்டு ராஜா said...

//மாதம் மாதம் தீட்டாக
வந்திருக்க வேண்டிய நீ
ஆண் குழந்தையாய் வந்தாய்...
அப்படியென்றால்
பெண்ணின் தீட்டு ஆணா?//

பெண்ணாதிக்க சிந்தனை ...//அனுஷ்கா,நமிதா,அசின்
நினைப்பில் குடும்பம் நடத்திய
அவனும் ....
அஜித்,மாதவன்,கிருத்திக் ரோஷன்
நினைப்பில் குடும்பம் நடத்திய
அவளும் ...
ஒரு சுப யோக சுப ஒப்பந்த தினத்தில்
இரு மணமும் இரு குடும்ப பணமும் கூடி
திருபணம் என்ற நல்லறத்தை
துவக்கினார்கள் ....
சுபம் .. //

நீங்க ரொம்ப யோக்கியமோ???

//1 யோகி ..//

யோகி என்பவன் ஏற்கனவே தன் அடையாளங்களை விட்டவன்.....

யுக கோபிகா said...

//ஒரே அதிரடி கவிதைகளாய் இருக்கு சகோ

ரொம்ப பிடித்தது

வாழ்த்துக்கள்//

நன்றி விஜய்

நா.பூ.பெரியார்முத்து said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி

www.periyarl.com - பகலவன் திரட்டிஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

வால்பையன் said...

//ஒரு ரெயில் விபத்தில்
ஒரே பெட்டியில் பயணம் செய்த
10 ஆத்திகர்கள் ...
5 நாத்திகர்கள் ...
3 ஜோதிடர்கள் ..
2 நான் கடவுள்கள் ...
1 யோகி ..
அனைவரும் இறந்தனர் தங்கள அடையாளங்களை
ரெயில் பெட்டியிலே விட்டு விட்டு ...//சூப்பரோ சூப்பர்!

ப்ரியமுடன் வசந்த் said...

வாழையடி வாழை நச்சென்ற குட்டு

தீட்டு ஹும்

திருபணம் ஹா ஹா ஹா

அடையாளம் சூப்பர்ப்...

யுக கோபிகா said...

//பெண்ணாதிக்க சிந்தனை ...//

ஒரு ஆறு வயசு வரைக்கும் பெண்ணாதிக்கம் இருந்தா தானே குழந்தை வளரும் ...

//நீங்க ரொம்ப யோக்கியமோ??? //
நானும் உங்களை மாதிரி தான் ...

//யோகி என்பவன் ஏற்கனவே தன் அடையாளங்களை விட்டவன்..... //
is it..is it ..is it ....?

யுக கோபிகா said...

//உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.//

Sure..I will do...
நன்றி நா.பூ.பெரியார்முத்து ...

//சூப்பரோ சூப்பர்! //
நன்றி வால்பையன் ...

யுக கோபிகா said...

//வாழையடி வாழை நச்சென்ற குட்டு

தீட்டு ஹும்

திருபணம் ஹா ஹா ஹா

அடையாளம் சூப்பர்ப்... //

நன்றி வசந்த்......

pinkyrose said...

hupppa... evlo kobamm..but a likeble one gobika..!

Anonymous said...

//இறுதியில் மணமகள் ஆக்கி...
என்னை ஏன் பிணமாக்கி ஆற்றில் எறிந்தீர்கள்?//

ஆழமான் சிந்தனை ,வாழ்த்துக்கள்

//ஒரு ரெயில் விபத்தில்
ஒரே பெட்டியில் பயணம் செய்த
10 ஆத்திகர்கள் ...
5 நாத்திகர்கள் ...
3 ஜோதிடர்கள் ..
2 நான் கடவுள்கள் ...
1 யோகி ..
அனைவரும் இறந்தனர் தங்கள அடையாளங்களை
ரெயில் பெட்டியிலே விட்டு விட்டு ...//


அழகான அறிவுரை...தொடரட்டும் உங்கள் பணி..

//மாதம் மாதம் தீட்டாக
வந்திருக்க வேண்டிய நீ
ஆண் குழந்தையாய் வந்தாய்...
அப்படியென்றால்
பெண்ணின் தீட்டு ஆணா?//

அருமையான கேள்வி!
பெண் குழந்தை பிறக்கும் போதும்
இப்படி தான் தடை படும் என்று நினைக்கிறேன்.
தவறானால் திருத்தவும், அனுபவம் இல்லை...

என்னை பொருத்த வரை:
ஆணும் பெண்ணும் சரி நிகர்

குறிப்பாக குழந்தைங்க பாவம்....அழும்... விட்டுவிடுங்க

கவிதை பணி தொடர வாழ்த்துக்கள்

மங்குனி அமைச்சர் said...

அடையாளம்

ஒரு ரெயில் விபத்தில்
ஒரே பெட்டியில் பயணம் செய்த
10 ஆத்திகர்கள் ...
5 நாத்திகர்கள் ...
3 ஜோதிடர்கள் ..
2 நான் கடவுள்கள் ...
1 யோகி ..
அனைவரும் இறந்தனர் தங்கள அடையாளங்களை
ரெயில் பெட்டியிலே விட்டு விட்டு .... ////அப்ப யாருமே மனுசங்க இல்லையா ???

Anonymous said...

ரசித்தேன்.. சில கவிதைகள் புரட்சிகரமான சிந்தனைகைளை தாங்கிவந்ததால் இன்று முதல் நீங்கள் புரட்சி தலைவி என்றழைக்கப்படுவீர்கள். இந்த பட்டத்தில் வேறு யாராவது இருப்பாராயின் நீங்கள் இளைய புரட்சி தலைவி என்றழைக்கபடுவீர்கள்... (ஆட்டோவெல்லாம் வேண்டாங்க.. நீங்க யுவகிருஷ்ணாவை அனுப்பிச்சாலே போதும்...)

யுக கோபிகா said...

நன்றி மங்குனி அமைச்சர்...
நன்றி pinkyrose...
நன்றி கோவை குமரன்...

யுக கோபிகா said...

//ரசித்தேன்.. சில கவிதைகள் புரட்சிகரமான சிந்தனைகைளை தாங்கிவந்ததால் இன்று முதல் நீங்கள் புரட்சி தலைவி என்றழைக்கப்படுவீர்கள். இந்த பட்டத்தில் வேறு யாராவது இருப்பாராயின் நீங்கள் இளைய புரட்சி தலைவி என்றழைக்கபடுவீர்கள்... //


அண்ணே ...நீங்க எவ்வளவு நல்லவரு ....ஆனா இந்த சமுதாயம் உங்க அளவுக்கு இல்ல -னே ....

Post a Comment