Friday, June 11, 2010

தாலி கட்டும் தமிழ் கலாச்சாரம் மறைய வேண்டும்.....



பாரதி கண்டிராத புதுமை பெண் என சுய விளம்பரம் கொடுத்து விட்டு 'சுண்டகாய் வத்தல் குழம்பு செய்வது எப்படி?'(எங்க அம்மாவுக்கு தான் தெரியும்) என்று பதிவு இடுவது எனக்கும் நல்லதல்ல , சுண்டகாய்க்கும் நல்லதல்ல,சமூகத்துக்கும் நல்லதல்ல...


எனவே .....

தாலி என்பது பெண்ணுக்கு வேலி,நாட்டுக் கோழி என்று சமூகத்தில் ஒரு காலத்தில் சொல்ல பட்டு வந்தது என்னவோ உண்மை தான்.

ஆனால் பெண்ணிற்கு அமெரிக்காவில் லச்சதிற்கு மேல் சம்பளம் கிடைக்கும் எனில் வேலி தாண்டி என்ன கடல் தாண்டி அனுப்ப கூட தயாராக இருக்கிறது நம் குடும்பம் என்ற சிறு சமூகம்[அம்மா,அப்பா,தம்பி,பாட்டி மன்னிக்கவும் ].
இந்த ஒரு விஷயம் ஒன்றே போதும் என நினைக்கிறன் சமூகத்தின் மனநிலை என்ன என்று படம் பிடித்து காட்ட .

ஒரு பத்து வருடங்களுக்கு முன் ஜீன்ஸ் போட்டு கொண்டு ஒரு பெண் நடந்தால் அவ்வளவுதான் . ...ஏகப்பட்ட பின்நூட்டம் (அதுதாங்க கமண்ட்ஸ்) வரும் .இப்போது அது படி படியாக குறைந்து வருகிறது.
[ஒரு படி மேலே போயே சொல்கிறேன்..உடையை பொறுத்த வரையில் ஜீன்ஸ் எனக்கு பிடித்த ஓன்று கிடையாது.ஜீன்ஸ் நம் உடம்பை ரொம்பவும் பிடித்து கொண்டு விடுவதால் ...அதை எனக்கு பிடிப்பதில்லை.]

தாலி கட்டும் கலாச்சாரம் மறைந்தால்,ஜீன்ஸ் போட்டு கொண்டு நடந்தால் பெண் சுகந்திரம் கிடைத்து விட்டது என்று நான் சொல்ல மாட்டேன்.[ஏன் என்றால் நான் தான் பாரதி கண்டிராத புதுமை பெண் ஆயிற்றே ] .
ஆனால் இது ஓவ்வொன்றும் பெண் மன அடிமை தனத்தில் இருந்து,தயக்கத்தில் இருந்து விடுபடும் ஒரு வழி முறையாகவே கருதுகிறேன்.

தாலி -க்கு பதில் ஆண், பெண் பரஸ்பரம் செய்ன்[பெரியார் சொல்லி விட்டார் என்று நெனைக்கிறேன்.எனக்கு பொது அறிவு கொஞ்சம் அதிகமாகவே குறைவு ] மாற்றிக் கொள்ளலாமே ?
[இதில் இன்னொரு சவுகரியம் என்னவெண்றால் ,அவசரத்துக்கு அடகு வைக்க இரண்டு செய்ன் உள்ளதே ....தாலி என்றால் ஓன்று தானே இருக்கும்]

கலாச்சாரம் என்பதெல்லாம் ஒருவித அடிமை படுத்தும் அமைப்பே என்று கருதுகிறேன்.
அந்தந்த கால கட்டதிற்கு எது சவுகரியமோ அதை செய்வது தான் சிறந்தது ...அது தான் உண்மையான் சுகந்திரம் என நான் கருதுகிறேன்.

எப்படியும் இந்த தாலி கட்டும் தமிழ் கலாச்சாரம் இன்னும் ஐம்பது வருடத்தில் இருந்து படி படியாக மறைய தொடங்கி ...இன்னும் 200 வருடத்தில் முழுவதும் மறைந்து விடும் என நான் நம்புகிறேன்.நீங்கள் நம்பறீங்களா ?

-யுக கோபிகா

29 comments:

settaikkaran said...

பரபரப்பாக ஆரம்பித்திருக்கிறீர்கள். நிச்சயம் விரைவில் பிரபலமாகி விடுவீர்கள்! வாழ்த்துக்கள்!

அன்புடன் நான் said...

என்னை பொறுத்தவரை தாலி என்பது அடிமைதனம் அல்ல. அது பெண்ணுக்கு கம்பீரமாகவே உள்ளது.
அதி விரும்புவதும் விரும்பாததும் அவரவர் விருப்பத்திற்கே!
சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட அனைத்து பெண்களும்... பாரதியின் புரட்சி பெண்ணாக இருப்பதாக எனக்கு தெரிய வில்லை.

மற்றப்படி உங்க பகிற்வுக்கு நன்றிங்க.

YUVARAJ S said...

//இதில் இன்னொரு சவுகரியம் என்னவெண்றால் ,அவசரத்துக்கு அடகு வைக்க இரண்டு செய்ன் உள்ளதே ....தாலி என்றால் ஓன்று தானே இருக்கும்//

So cute!

YUVARAJ S said...

http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

இந்த பதிவிற்கு உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி

யுக கோபிகா said...

//பரபரப்பாக ஆரம்பித்திருக்கிறீர்கள். நிச்சயம் விரைவில் பிரபலமாகி விடுவீர்கள்! வாழ்த்துக்கள்!//


உங்கள் வாக்கு பழிக்கட்டும்...
சேட்டைக்காரன் அவர்களின் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி ..

யுக கோபிகா said...

//என்னை பொறுத்தவரை தாலி என்பது அடிமைதனம் அல்ல. அது பெண்ணுக்கு கம்பீரமாகவே உள்ளது.
அதி விரும்புவதும் விரும்பாததும் அவரவர் விருப்பத்திற்கே!//

நீங்கள் சொல்வது உங்கள் விருப்படி சரிதான் ....
"அது பெண்ணுக்கு கம்பீரமாகவே உள்ளது" என்பதை வருங்கால பெண்கள் அனைவரும் ஏற்று கொண்டால் எனகொன்றும் மாற்று கருத்து இல்லை .....
என் விருப்பம் என்னவெனில் ஆண், பெண் பரஸ்பரம் செய்ன் மாற்றிக் கொள்ளலாமே என்கிறேன் ...
ஏன் இதை சொன்னவுடன் இதுவும் ஏற்று கொள்ள கூடிய வழிமுறை என்று கொள்ளலாமே?
தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி...

யுக கோபிகா said...

//So cute!//

Thanks Yuvaraj S...

எல் கே said...

தளி என்பது தமிழருக்கு மட்டும் உரித்தான ஒன்று அல்ல. ஆந்திராவில், கருகமணி போன்ற ஒன்று உள்ளது. வட இந்தியாவிலும் அதே போன்று உள்ளது . மேலும், தாலி அணிவது பெண் அடிமைத் தனம் அல்ல. முன்பு பெண்களுக்குத் தாலயும், ஆண்களுக்கு மெட்டியும் உண்டு. நடுவில் யாரோ ஆண்களின் மெட்டியை கழட்டி விட்டனர். ஒரு சில இன மக்களிடம் திருமணத்தின் பொழுது ஆண்களுக்கு மெட்டி அணிவிக்கும் பழக்கம் உண்டு.

யுக கோபிகா said...

தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி LK..

வால்பையன் said...

தலைப்பு எதுவுமே வர மாட்டிங்குதே!
தவறான இடத்தில் போடுறிங்கன்னு நினைக்கிறேன்!

**********

நானும் நம்புறேன், தாலி வழக்கொழியும்!

யுக கோபிகா said...

//தலைப்பு எதுவுமே வர மாட்டிங்குதே!
தவறான இடத்தில் போடுறிங்கன்னு நினைக்கிறேன்! //
நான் title கொடுக்காததால் தலைப்பு வரவில்லை என்று நினைக்கிறேன்....
தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி வால் பையன்...

VELU.G said...

நல்ல கருத்துதாங்க

யுக கோபிகா said...

நன்றி VELU.G ..

அகல்விளக்கு said...

நிச்சயம் தாலியணியும் பழக்கம் வழக்கொழியும்..

சரியான பார்வை தோழி...

யுக கோபிகா said...

தங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி அகல்விளக்கு...

விஜய் said...

என்னை தொடர்வதற்கு நன்றி சகோதரி

பழங்காலத்தில் பனை ஓலையில் பெயரெழுதி கழுத்தில் மாட்டினார்கள். அதன் பரிணாம வளர்ச்சியே தாலி. இதைப்பற்றி விவாதிக்க நிறைய விஷயம் உள்ளது.

வாழ்த்துக்கள் சகோதரி

விஜய்

யுக கோபிகா said...

//பழங்காலத்தில் பனை ஓலையில் பெயரெழுதி கழுத்தில் மாட்டினார்கள்.//

ஒ ....அப்படியா ?
நன்றி விஜய் ..

நஜீபா said...

அது ஒரு பந்தத்தின் நினைவூட்டலாய் இருப்பின் இருவருக்குமே நல்லது. ஆனால், அது அடக்குமுறைக்கோ, ஆதிக்கத்துக்கோ அத்தாட்சியாகக் கருதப்படும்போது தான் இத்தகைய தீவிர சிந்தனைகள் ஏற்படுகின்றன போலும்! துணிவு!

Kousalya Raj said...

இப்பவே மீடியாக்களில் வருபவர்கள் பலர் தாலி அணியாமல் தானே இருக்கிறார்கள். நீங்க சொன்ன கலாசாரம் தொடங்கிவிட்டது என்றே தோன்றுகிறது!!

மங்குனி அமைச்சர் said...

நல்லா அருமையா எழுதுறிங்க , வாழ்த்துக்கள்

யுக கோபிகா said...

//அது ஒரு பந்தத்தின் நினைவூட்டலாய் இருப்பின் இருவருக்குமே நல்லது. ஆனால், அது அடக்குமுறைக்கோ, ஆதிக்கத்துக்கோ அத்தாட்சியாகக் கருதப்படும்போது தான் இத்தகைய தீவிர சிந்தனைகள் ஏற்படுகின்றன போலும்! துணிவு!//

சரியான புரிதல் ...நன்றி நஜீபா

யுக கோபிகா said...

//இப்பவே மீடியாக்களில் வருபவர்கள் பலர் தாலி அணியாமல் தானே இருக்கிறார்கள். நீங்க சொன்ன கலாசாரம் தொடங்கிவிட்டது என்றே தோன்றுகிறது!! //

நன்றி Kousalya..

யுக கோபிகா said...

//நல்லா அருமையா எழுதுறிங்க , வாழ்த்துக்கள்//

உங்களை விடவா ...நன்றி மங்குனி அமைச்சர்....

பனித்துளி சங்கர் said...

இங்கு தாலி கட்டும் தமிழ் கலாச்சாரம் மறைய வேண்டும் என்பதை விட . விரைவில் மறைந்து விடும் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்று . எழுத்தில் ஒரு எழுச்சி தெரிகிறது . புரட்சிப் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் !

யுக கோபிகா said...

நன்றி சங்கர் .....

நா.பூ.பெரியார்முத்து said...

சிந்தனை அருமை தொடர்க!



உன்மைலேயே புரச்சிதான் கோபிகா




வாழ்த்துக்கள்

யுக கோபிகா said...

நன்றி நா.பூ.பெரியார்முத்து....

ப்ரியமுடன் வசந்த் said...

அய்யய்யோ... தாலின்னாலே அலர்ஜி மீ த எஸ்கேப்பு

தனி காட்டு ராஜா said...

//அய்யய்யோ... தாலின்னாலே அலர்ஜி மீ த எஸ்கேப்பு //

Followers -Option -ல் இருந்து கூட எஸ்கேப் போல ...

Post a Comment